Wednesday, November 30, 2011

சொல்ல வந்தேன் - சுழல்



இசை: ஹரிஹரன், சாதனா சர்கம்
பாடியவர்: கணேசன்


சொல்ல வந்தேன் சொல்லாத ஆசையெல்லாம்
சொல்ல வந்தேன்
கேட்க வந்தேன் கேட்காத காதல் கதை
கேட்க வந்தேன்

நான் நிலமாக நின்றேன் நீ மழையாக வந்தாய்
நான் கண்மூடி கிடந்தேன் நீ கணவாக நுழைந்தாய்
என் அன்பே என் அன்பே பேரன்பே, என் உயிருக்குள் புது சுகம்

சொல்ல வந்தேன் சொல்லாத ஆசையெல்லாம்
சொல்ல வந்தேன்
கேட்க வந்தேன் கேட்காத காதல் கதை
கேட்க வந்தேன்

காதல் பூக்கும் அழகான பூங்கா இருதயம் என்பதிலே சந்தேகமா
பூத்த பின்பும் உதிராத பூவாய் உயிர் காதல் வாழ்கிறதே சந்தோஷமாய்
வெந்நிலாவை வண்ணமூட்டி உன்னுடைய பெயர் சூட்டி கொண்டாடவா
போகுகின்ற மேகங்களில் உன்னை நானும் ஏற்றிகொண்டு ஊர் சுற்றவா
மனமெனும் மண்டபத்தில் திடுமென புகுந்தவன் நீயல்லவா
உறவெனும் உலகத்தில் உனக்கென உகுந்தவள் நான் அல்லவா
நீ வேறே நான் வேறு இனி இல்லை
இந்த உலகத்தில் உன்னை விட உயர்வேதும் இல்லை

சொல்ல வந்தேன் சொல்லாத ஆசையெல்லாம்
சொல்ல வந்தேன்
கேட்க வந்தேன் கேட்காத காதல் கதை
கேட்க வந்தேன்

ஈர இதயம் வறண்டு விடாமல்
உன் நினைவின் மழையால் நான் நனைப்பேன்
தூரப்பயணம் போய் வரும் போது
அசதியில் உன் மடியின்மேல் நான் துயில்வேன்
உச்சிவெயில் மிகிதத்தில்
உன்னுடைய நிழலில் இளைப்பாருவேன்
அடை மழை காலத்தில்
கத கத மார்பகத்தில் குடியேருவேன்
இமைகளின் முடி கொண்டு
இதயத்தின் நடுவிலே உன்னை தேடுவேன்
சிறு சிறு புன்னகையால்
சிந்தனையில் காதல் விதை நான் தூறுவேன்
தீ கொஞ்சம் பூ கொஞ்சம் நீ என்பேன்
உன் உதடுகள் எழுதட்டும் உணர்ச்சியின் விடையை

சொல்ல வந்தேன் சொல்லாத ஆசையெல்லாம்
சொல்ல வந்தேன்
கேட்க வந்தேன் கேட்காத காதல் கதை
கேட்க வந்தேன்

நான் நிலமாக நின்றேன் நீ மழையாக வந்தாய்
நான் கண்மூடி கிடந்தேன் நீ கணவாக நுழைந்தாய்
என் அன்பே என் அன்பே பேரன்பே, என் உயிருக்குள் புது சுகம்

No comments:

Post a Comment