Tuesday, October 16, 2012

இதயம் இந்த இதயம் = பில்லா 2

இசை: யுவன் ஷங்கர் ராஜா 
பாடியவர்: ஸ்வேதா பண்டிட் 



இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ
ஆசை தூண்டிலில் மாட்டிக்கொண்டு
உயிர் தத்தளித்து துடிக்கிறதே
காயம் யாவையும் தேற்றிக்கொண்டு
இது மறுபடியும் நினைக்கிறதே
உள்ளுக்குளே துடிக்கும் சிறு இதயம்
எத்தனையோ கடலை இது விழுங்கும்

வேண்டும் வேண்டும் என்று கேட்கையிலே
வேண்டாம் வேண்டாம் என்று சொல்லுமே..
வேண்டாம் வேண்டாம் என்று விலகி நின்றால்
வேண்டும் வேண்டும் என்று துள்ளுமே..
இது தவித்திடும் நெருப்பா
இல்லை குளிர்ந்திடும் நீரா
இது பனி எரி மலையா
இதை அறிந்தோர் யாருமில்லை
உள்ளத்திலே அறையுண்டு வாசல் இல்லை
உள்ளே வந்திடும் நினைவோ திரும்பவில்லை

தூங்கும் போதும் இது துடிதிடுமே
ஏங்கும் போதும் இது வெடிக்கும்
தீண்டும் விரல் என்று தெரிந்த பின்பும்
வேண்டும் என்றே இது வெடிக்கும்
இது கடவுளின் பிழையா
இல்லை படைத்தவன் கொடையா
கேள்வி இல்லா விடையா
இதை அறிந்தோர் யாருமில்லை
இதயம் எல்லை என்றல் என்ன நடக்கும்
கண்ணீர் எண்ணம் வார்த்தையை மாறி இழக்கும்

இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ


யாவும் பொய்தானா = ஆதி பகவான்

இசை: யுவன் ஷங்கர் ராஜா 
பாடியவர்: மதுஸ்ரீ 



யாவும் பொய்தானா காதல் தவிர மண்ணிலே
நீ என் உயிர் தானா நானும் பிழைத்தேன் உன்னாலே
காதல் உன்னோடு கருவானாதே
காற்றில் இசைபோல பறிபோனதே
இதுவரை இது இல்லை
எதுவரை இதன் எல்லை
எனக்கொரு பதில் சொல்வாயடா

உனக்கான மௌனத்தில் எனக்கான வார்த்தையை
நான் தேடிப்பார்த்ததில் சுகம் கண்டேன் கண்டேன் நான் தானடா
புவி எங்கும் இதயங்கள் வாழ்கின்ற போதிலும்
என்னகான இதயமாய் உன்னை கண்டேன் கண்டேன் நான் தானடா

யாவும் பொய்தானா காதல் தவிர மண்ணிலே
நீ என் உயிர் தானா நானும் பிழைத்தேன் உன்னாலே

உந்தன் உறவே போதும் எனக்கு அன்பே
உந்தன் அனைப்பால் மூச்சை நிறுத்து அன்பே
கொஞ்சம் மயக்கம் கொஞ்சம் தயக்கம்
ரெண்டும் காதல் தந்த பரிசுதான்
கொஞ்சம் இறுக்கம் கொஞ்சம் இறக்கம்
ரெண்டும் பெண்மை கேட்க்கும் பரிசுதான்

ஆசை அனைத்தும் உன்னை நோக்கியே போக
ஓசை இன்றியே வார்த்தை அனைத்தும் சாக
தூங்கும் விழிகளில் தூறல் விழுந்ததை
துரம் குறைகையில் உணர்கிறேன்
எந்தன் அறைகளில் ஆடை திரைகளை
விட்டு விலகி நான் மலர்கிறேன்

உனக்கான மௌனத்தில் எனக்கான வார்த்தையை
நான் தேடிப்பார்த்ததில் சுகம் கண்டேன் கண்டேன் நான் தானடா
புவி எங்கும் இதயங்கள் வாழ்கின்ற போதிலும்
என்னகான இதயமாய் உன்னை கண்டேன் கண்டேன் நான் தானடா