Wednesday, November 30, 2011

சொல்ல வந்தேன் - சுழல்



இசை: ஹரிஹரன், சாதனா சர்கம்
பாடியவர்: கணேசன்


சொல்ல வந்தேன் சொல்லாத ஆசையெல்லாம்
சொல்ல வந்தேன்
கேட்க வந்தேன் கேட்காத காதல் கதை
கேட்க வந்தேன்

நான் நிலமாக நின்றேன் நீ மழையாக வந்தாய்
நான் கண்மூடி கிடந்தேன் நீ கணவாக நுழைந்தாய்
என் அன்பே என் அன்பே பேரன்பே, என் உயிருக்குள் புது சுகம்

சொல்ல வந்தேன் சொல்லாத ஆசையெல்லாம்
சொல்ல வந்தேன்
கேட்க வந்தேன் கேட்காத காதல் கதை
கேட்க வந்தேன்

காதல் பூக்கும் அழகான பூங்கா இருதயம் என்பதிலே சந்தேகமா
பூத்த பின்பும் உதிராத பூவாய் உயிர் காதல் வாழ்கிறதே சந்தோஷமாய்
வெந்நிலாவை வண்ணமூட்டி உன்னுடைய பெயர் சூட்டி கொண்டாடவா
போகுகின்ற மேகங்களில் உன்னை நானும் ஏற்றிகொண்டு ஊர் சுற்றவா
மனமெனும் மண்டபத்தில் திடுமென புகுந்தவன் நீயல்லவா
உறவெனும் உலகத்தில் உனக்கென உகுந்தவள் நான் அல்லவா
நீ வேறே நான் வேறு இனி இல்லை
இந்த உலகத்தில் உன்னை விட உயர்வேதும் இல்லை

சொல்ல வந்தேன் சொல்லாத ஆசையெல்லாம்
சொல்ல வந்தேன்
கேட்க வந்தேன் கேட்காத காதல் கதை
கேட்க வந்தேன்

ஈர இதயம் வறண்டு விடாமல்
உன் நினைவின் மழையால் நான் நனைப்பேன்
தூரப்பயணம் போய் வரும் போது
அசதியில் உன் மடியின்மேல் நான் துயில்வேன்
உச்சிவெயில் மிகிதத்தில்
உன்னுடைய நிழலில் இளைப்பாருவேன்
அடை மழை காலத்தில்
கத கத மார்பகத்தில் குடியேருவேன்
இமைகளின் முடி கொண்டு
இதயத்தின் நடுவிலே உன்னை தேடுவேன்
சிறு சிறு புன்னகையால்
சிந்தனையில் காதல் விதை நான் தூறுவேன்
தீ கொஞ்சம் பூ கொஞ்சம் நீ என்பேன்
உன் உதடுகள் எழுதட்டும் உணர்ச்சியின் விடையை

சொல்ல வந்தேன் சொல்லாத ஆசையெல்லாம்
சொல்ல வந்தேன்
கேட்க வந்தேன் கேட்காத காதல் கதை
கேட்க வந்தேன்

நான் நிலமாக நின்றேன் நீ மழையாக வந்தாய்
நான் கண்மூடி கிடந்தேன் நீ கணவாக நுழைந்தாய்
என் அன்பே என் அன்பே பேரன்பே, என் உயிருக்குள் புது சுகம்

Wednesday, November 23, 2011

ஆம்புளைக்கும் பொம்புளைக்கும் - கழுகு

இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: கிருஷ்ணராஜ், வேல்முருகன், சத்யா



ஆம்புளைக்கும் பொம்புளைக்கும் அவசரம்
அதை காதலுனு சொல்லுராங்க அனைவரும்
காதல் ஒரு கண்ணாபூச்சி கலவரம்
எப்போதுமே போதையான நிலவரம் (2)

அப்போ ஆணும் பெண்ணும் ஒத்துமையா இருந்திச்சி
அது காதலுல உலகத்தையே மறந்துச்சி
அது வாழ்ந்த போதிலும் இல்ல இறந்த போதிலும்
அது பிரிஞ்சதேயில்ல அது மறஞ்சேதேயில்ல
தினம் ஜோடி ஜோடியா இங்க செத்து கிடக்கும்டா
அது தூக்கும் போதெல்லாம் என் நெஞ்சு வலிக்கும்டா

நீ சொல்லும் காதல் எல்லாம் மலையேரி போச்சு செத்து
தும்மல போல வந்து போகுது இந்த காதலு
காதலுனு சொல்லுராங்க கண்டபடி சுத்துராங்க
தப்பு குறைஞ்சா மப்பு குறைஞ்சா தள்ளி போராங்க
காதல் எல்லாமே ஒரு கண்ணாமுச்சி
இதில் ஆணும் பெண்ணுமே காணாபோச்சி
காதலிலே தற்கொளைகள் குறைஞ்சே போச்சி
அட உண்மை காதலே இல்ல சித்தப்பு
இங்க ஒரு சாவுரான் ஆனா ஒருத்தன் வாழுரான்
அட என்னடா உலகம் அதில் எத்தனை கலகம்
இங்க காதலே பாவம் இது யார் விட்ட சாபம்

ஆம்புளைக்கும் பொம்புளைக்கும் அவசரம்
அதை காதலுனு சொல்லுராங்க அனைவரும்

இன்னைக்கு காதல் எல்லாம் ரொம்ப ரொம்ப மாறிடுச்சி
கண்ணப்பாக்குது கைய கோட்குது ரூம் கேட்குது
எல்லாம் முடிஞ்ச பின்னும் friend'னு சொல்லிகிட்டு
வாழுரவுங்க ரொம்ப பேருடா கேட்டு பாருடா
இப்ப காதல் தோத்துடா யாரும் சாவதே இல்ல
அந்த பொண்ணு தோத்துட்டா ரெண்டு இருக்குது உள்ள
இப்ப எல்லாம் தேவதாசு எவனும் இல்ல

அவன் பொழுது போக்குக்கு ஒரு figure பாக்குறான்
அவ செலவு பண்ணதான் ஒரு loosu தேடுறா
ரெண்டு பேருமே இங்க பொய்யா பழகுறான்
ரொம்ப புளிச்சி போச்சுனா கை குலுக்கி பிரியுறான் (2)

Tuesday, November 22, 2011

Hey அனாமிக்கா - மெளனகுரு

இசை: தமன்
பாடியவர்: கார்த்திக், ஹரினி



hey அனாமிக்கா
hey அனாமிக்கா
அடி மன விழிகளில் அனாமிக்கா
hey அனாமிக்கா
hey அனாமிக்கா
அலை என அலைந்திடும் அனாமிக்கா
hey அனாமிக்கா
hey அனாமிக்கா
அடைமழை குடை என அனாமிக்கா
hey அனாமிக்கா
hey அனாமிக்கா
அறையினில் பிறை என அனாமிக்கா

என் இதையம் திசை மாறி
காட்டுகின்ற திசையில் நீ
என்னவென்று அவதானில் காதல் தானா
உன் விழியில் வாழ்வேனா
உன் நிழலில் வீழ்வேனா
கேள்வி கேட்க்கும் நெஞ்சோடு காதல் தானா

hey hey உன் அருகினில்
நொடிகளின் இடைவெளி பெருகிட கண்டேனே
hey hey உன் அருகினில்
புது ஒரு உறவினை அறிய கண்டேனே
hey hey உன் அருகினில்
உரையுடன் நீயே விரும்பிட கண்டேனே
ஓ ஒஹோ என் கனவினில்
ஓர் இருதய பெயர்ச்சியய் கண்டேனே

hey அனாமிக்கா
hey அனாமிக்கா
அடி மன விழிகளில் அனாமிக்கா
hey அனாமிக்கா
hey அனாமிக்கா
அலை என அலைந்திடும் அனாமிக்கா
hey அனாமிக்கா
hey அனாமிக்கா
அடைமழை குடை என அனாமிக்கா
hey அனாமிக்கா
hey அனாமிக்கா
அறையினில் பிறை என அனாமிக்கா

என் இதையம் திசை மாறி
காட்டுகின்ற திசையில் நீ
என்னவென்று அவதானில் காதல் தானா

யாரோடும் கானா ஒன்றை உன்னில் நானும் கண்டேன்
hey உன் உடல் மொழி காதல் மொழியுதே
ஊரோடு ஏனோ இன்று வண்ணங்கள் கூட கண்டேன்
hey உன் எதிரொலி நெஞ்சில் பதியுதே
hey hey தினசரி கனவதன் உணவு என
உனை தரும் நினைவுகள் தேத்துகிறேன்
hey உன் அரைகுறை உரைகளை கரையுமுன்
உரை சில அரைகளில் பூட்டுகிறேன்

hey hey உன் அருகினில்
உரையுடன் நீயே விரும்பிட கண்டேனே
ஓ ஒஹோ என் கனவினில்
ஓர் இருதய பெயர்ச்சியய் கண்டேனே

hey அனாமிக்கா
hey அனாமிக்கா
அடி மன விழிகளில் அனாமிக்கா
hey அனாமிக்கா
hey அனாமிக்கா
அலை என அலைந்திடும் அனாமிக்கா
hey அனாமிக்கா
hey அனாமிக்கா
காதல் தானா...

Thursday, November 10, 2011

ஒருவான் இருவா - அரவான்

இசை: கார்த்திக்
பாடியவர்: கார்த்திக்



ஒருவான் இருவான் பலவான்
கேட்பவன் அரவான்
எழுவான் விழுவான்
இனத்தை காப்பவன் அரவான் (2)

பலவான் பலவான் பகையை முடிப்பான்
அரவான்
வருவான் ஒரு நாள் வெற்றியை குடிப்பான்
அரவான்

தேர் தருவான் போர்வை தருவான்
கவசகுன்டங்கள் தருவான்
கடை ஏழு வள்ளல்கள் எல்லம்
கொடை மட்டும் தருவான் (2)

படை தருவான் கோட்டை கொத்தளங்கள்
தருவான்
பெருகும் பட்டனங்கள் தருவான்
உருகும் ஊனை
உருகும் ஊனை
உருகும் ஊனை அவன் தருவான்

அவன் தான் அரவான்.. அவன் தான் அரவான்..
அவன் தான் அரவான்.. அவன் தான் அரவான்.. (2)

பாம்பாகி வந்தவன்
அரவான்
மாயன் பெண்ணாகி வந்தவன்
அரவான்
போராளி இனத்தவன்
அரவான்
தன் பங்காளி மதித்தவன்
அரவான்
தன் வில்லை தனக்கே
விடுத்தவன்
தன் பெண்ணை தானே
கெடுத்தவன்
பொல்லாத பூவாய்
பூத்தவன் அரவான்
கல்லாகி கடவுளானவன்
அரவான்

ஒரு நாள்
அவன் வெற்றியை குடிப்பான்
அரவான்

அவன் தான் அரவான்.. அவன் தான் அரவான்..
அவன் தான் அரவான்.. அவன் தான் அரவான்.. (2)

ஒருவான் இருவான் பலவான்
கேட்பவன் அரவான்
எழுவான் விழுவான்
இனத்தை காப்பவன் அரவான்

பலவான் பலவான் பகையை முடிப்பான்
அரவான்
வருவான் ஒரு நாள் வெற்றியை குடிப்பான்
அரவான்

அவன் தான் அரவான்.. அவன் தான் அரவான்..
அவன் தான் அரவான்.. அவன் தான் அரவான்.. (2)